primeminister , pmmodi , salem , bjp , gentralmeet , loksabhaelection2024 , thanthitv

Update: 2024-03-19 16:25 GMT

வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை உருவாக்க தேசிய ஜனநாயக கூட்டணி உறுதி கொண்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பாஜக சார்பில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். பாரத அன்னை வாழ்க என்ற தமிழில் பேசத் தொடங்கிய அவர், தனக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கம் கலைந்து விட்டது என்று கூறினார்.

வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டினை உருவாக்க தேசிய ஜனநாயக கூட்டணி உறுதி கொண்டுள்ளது என்றும், அதற்கேற்ப ராமாதாஸ் இணைந்த பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி வலுவடைந்து விட்டது என்றும் பிரதமர் மோடி கூறினார்.

சேலத்தில் பாஜகவுக்காக ஆடிட்டர் ரமேஷ் பணியாற்றியதை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, அப்போது அவரை நினைத்து கண் கலங்கினார்.

திமுக, காங்கிரஸ் கூட்டணி, இந்து மதத்தை விமர்சிக்கும் அளவிற்க்கு வேறெந்த மதத்திற்கும் எதிராக ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தமிழகத்திற்கு பல லட்சம் கோடி ரூபாய் நிதியளிக்க மத்திய அரசு தயாராக இருந்தாலும், இங்குள்ள அரசு அதில் எப்படி கொள்ளையடிக்கலாம் என திட்டம் போடுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட வழித்தடம், தமிழ்நாட்டில் ஒரு ஜவுளி பூங்காவை கொண்டு வந்துள்ளது என்றும் அவ் கூறினார். உலகின் மிகவும் தொன்மையான தமிழ் மொழியை உணர்ந்தும், அதை பேச முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது என்றும், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழில் பேசி வருவதாகவும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்