மோடியை பற்றி வாய்விட்ட பாஜக வேட்பாளர்..எதிர்கட்சிக்கு லட்டு போல் கிடைத்த சான்ஸ்

Update: 2024-05-21 03:42 GMT

மோடியை பற்றி வாய்விட்ட பாஜக வேட்பாளர்..எதிர்கட்சிக்கு லட்டு போல் கிடைத்த சான்ஸ் - அடித்து ஆடும் ராகுல், கெஜ்ரிவால்

பூரி ஜெகன்னாதர் பிரதமர் மோடியின் பக்தர்

என்று கூறி கடவுளை இழிவு படுத்துவதா

என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ஒடிசாவில் உள்ள பூரி ஜெகன்னாதர் கோயில்

உலக பிரசித்தி பெற்றது. இந்நிலையில் பூரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்

சம்பித் பாத்ரா ஊடகம் ஒன்றுக்கு அளித்த

பேட்டியில் பூரி ஜெகன்னாதர் பிரதமர்

மோடியின் பக்தர் என்று கூறியுள்ளார்.

இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. பூரி ஜெகநாதர் மீது நம்பிக்கை கொண்டுள்ள கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை

பாஜக புண்படுத்தி விட்டதாக ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதேபோல் பாஜவினர் கடவுளை விட தங்களை மேலானவர்கள் என கருத தொடங்கி இருப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவித்துள்ள ராகுல்காந்தி

பிரதமர் தன்னை பேரரசராகவும் , அவரை மக்கள் கடவுளாக கருத தொடங்கும் போது பாஜகவின்

வீழ்ச்சி நெருங்கி விட்டது என்பதையே

காட்டுவதாக விமர்சித்துள்ளார்.இதனிடையே பாஜக வேட்பாளர் சம்பித் பாத்ரா

பிரதமர் மோடி பூரி ஜெகன்னாதரின் பக்தர் என்பதை

தான் வாய் தவறி மாற்றி கூறி விட்டதாக விளக்கம் அளித்துள்ளார். இதனை அரசியல் ஆக்க வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்