கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் 90 விழுக்காடு வளர்ச்சி அடைந்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். பிரபல ஆங்கில நாளிதழ் சார்பில் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இந்தியா சில சமயங்களில் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் 90 விழுக்காடு பொருளாதாரத்தில் வளர்ச்சியை எட்டியிருப்பதாகவும் தெரிவித்தார். குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து வெளியேறி புதிய நடுத்தர வர்க்கத்தை உருவாக்கியுள்ளதாக அவர் கூறினார்...