``இந்தியாவிடம் குரூட் ஆயில், எரிவாயு இல்லை.. அதனால்..''16 நகரங்களில் மோடி போட்ட மெகா பிளான்
குஜராத் மாநிலம் காந்திநகரில் 4 ஆவது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி பேசிய போது, 2047-க்குள் வளர்ந்த நாடாகுவதற்கு ஆற்றல் தேவையை இந்தியா அறியும் என்றார். எங்களிடம் சொந்தமாக எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பு இல்லை, எனவே சூரிய, காற்று, அணு மற்றும் நீர் சக்திகளில் எதிர்காலை தேவையை சாந்திருப்பதாக குறிப்பிட்டார். புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்காக புதிய கொள்கைகளை உருவாக்கி, ஒவ்வொரு வழியிலும் ஆதரவளிப்பதாக தெரிவித்தார். வீடுகளில் மின் உற்பத்திக்கு ஒரு கோடியே 30 லட்சம் குடும்பங்கள் பதிவு செய்திருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, அயோத்தி உள்பட 16 நகரங்களை மாதிரி சோலார் சிட்டியாக உருவாக்க பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.