ராகுல் காந்தியை அவமதித்த அனுராக் தாக்கூர்? - எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

Update: 2024-08-01 02:34 GMT

மக்களவை தொடங்கியதும், ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக விவாதிக்க வேண்டும், பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். செவ்வாய்கிழமை பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர், தங்களது ஜாதி என்னவென்று தெரியாதவர்கள், ஜாதி வாரியாக கணக்கெடுப்பது குறித்து பேசுகிறார்கள் என்றார். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சியினர், அவர் ராகுல் காந்தியை குறிப்பிட்டே சொல்கிறார் என குற்றம் சாட்டினார். தான் யார் பெயரையும் சொல்லவில்லை என அனுராக் தாக்கூர் சொல்ல, தம்மை எவ்வளவு அவமதிக்க வேண்டுமோ, அவமதிக்கட்டும்... ஆனால் நாங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி காட்டுவோம் என்று ராகுல் காந்தி கூறியிருந்தார். இவ்விவகாரத்தை இன்றும் அவையில் எழுப்பிய காங்கிரஸ் எம்.பி.க்கள் அனுராக் தாக்கூர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றனர். காங்கிரஸ் அமளியால் அவை 12 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்