தொடர் தோல்வி.. இணைப்பு என அடிபடும் தகவல்கள் - 26-ஐ மனதில் வைத்து ஈபிஎஸ் அதிரடி முடிவு

Update: 2024-07-12 03:17 GMT

தொடர் தோல்வி.. இணைப்பு என அடிபடும் தகவல்கள் - 26-ஐ மனதில் வைத்து ஈபிஎஸ் அதிரடி முடிவு

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர உள்ளதாக அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், சென்னையில் 3 நாட்களாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற வருகிறது. நேற்று சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து விரிவாக கேட்டறிந்த அவர், வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற, தற்போது இருந்தே களப்பணியாற்ற வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வலுவான கூட்டணி அமைக்கும் என்று அவர் கூறியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்