6 OPS-ஆ 7 OPS-ஆ? - களத்தில் கன்பியூஸ் ஆன ஒரிஜினல் ஓபிஎஸ்
இராமநாதபுரம் அருகே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தனக்கு எதிராக ஏழு பன்னீர் செல்வங்கள் போட்டியிடுவதாக தவறுதலாக தெரிவித்தார். பாஜக ஆதரவுடன் பலாப்பழம் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஓ.பிஎஸ், திருப்புல்லாணியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அவருடன் சேர்த்து 6 பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிடும் நிலையில், தன்னுடன் சேர்த்து 7 பன்னீர் செல்வங்கள் போட்டியிடுவதாக தவறுதலாக தெரிவித்தார்.