மக்களவையை கலைத்து மோடி, அமித்ஷாவுக்கு விருந்து வைத்த குடியரசுத் தலைவர் முர்மு
மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று 17வது மக்களவையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலைத்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சம்பிரதாய முறைப்படி குடியரசுத்தலைவர் மாளிகையில் இரவு விருந்து வைத்தார். இதில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.