"இதுவே சாட்சி" - லிஸ்ட் போட்டு அதிரவிட்ட முதல்வர் ஸ்டாலின்

Update: 2024-05-31 10:58 GMT

திராவிட மாடல் அரசின் மூன்றே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கல்வித்துறை கண்டுள்ள நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சிக்கு இன்றைய செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளே சாட்சி என்று முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் பெருமிதம் தெரிவித்துள்ளார்... 20 ஆயிரத்து 332 அரசு - அரசு உதவி பெறும் பள்ளிகளில் இணைய வசதி, 519 கோடியே 73 லட்ச ரூபாயில் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வகங்கள், 22 ஆயிரத்து 931 ஸ்மார்ட் வகுப்பறைகள்,

புதுமைப் பெண், நான் முதல்வன் திட்டங்களினால் உயர் கல்வியில் சேரும் பெண்கள், மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு என சாதனைகளைப் பட்டியலிட்ட முதல்வர், பயணத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டை உயர்த்துவோம் என அழைப்பு விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்