தி.மு.க இளைஞரணியின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் பங்கேற்கும் கூட்டம் வேலூரில் நாளை காலை நடைபெறுகிறது. இதுகுறித்து தி.மு.க இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு பேச்சுப் போட்டி, மாரத்தான் போட்டிகளை நடத்துவது, கலைஞர் நூலகம் அமைப்பது, இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டுப் பணிகள் தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இளைஞர் அணி அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.