சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தனியார் நிதி பங்களிப்பின் மூலம் கட்டப்பட்ட புதிய மக்கள் மன்றத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் நிதி மூலம் புதுப்பிக்கப்பட்ட இலவச சமுதாய கழிப்பிடத்தையும் திறந்து வைத்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், சிந்தாதிரிப்பேட்டை பம்பிங் ஸ்டேஷன் பகுதிகளில் புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும் என, சட்டப்பேரவையில் அரசுக்கு கோரிக்கை வைக்க உள்ளதாக உறுதி அளித்தார்.
Minister Udayanidhi Stalin inaugurated the People's Forum