அமெரிக்காவில் ஒலித்த தமிழக அரசின் சாதனைகள் அமைச்சர் சுவாரசிய பேச்சு | Thanthitv
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவத் துறையில் தமிழ்நாடு சிறப்பான சாதனைகள் செய்து, சுகாதாரப் பாதுகாப்பு வழங்குவதில் சிறந்து விளங்குவதாக குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டு, இதுவரை 1 கோடியே 40 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று, வருமுன் காப்போம் திட்டம், அவசர ஊர்தி சேவை திட்டம், மாணவர்களின் கண் பார்வை குறைபாடுகளை கண்டறிவதற்கான கண்ணொளி காப்போம் திட்டம், சாலை விபத்துகளில் அவசர மருத்துவ சிகிச்சை வழங்கும் நம்மை காக்கும் 48 திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். இவை தவிர, இதய பாதிப்புகளை கண்டறிந்து சிகிச்சை வழங்கும் இதயம் காப்போம் திட்டம், சிறுநீரகம் பாதுகாப்பு திட்டம், தொழிலாளரை தேடி மருத்துவம் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.