கார்கேவின் கோரிக்கை மறுப்பு.. திரிணாமூர் MPக்கு எச்சரிக்கை.. உச்சகட்ட பரபரப்பு

Update: 2024-08-08 12:10 GMT

மாநிலங்களவை தொடங்கியதும், வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து விவாதிக்க வேண்டும் என மல்லிகார்ஜூன கார்கே கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து ஏற்கனவே விவாதிக்கப்பட்டுவிடதாக அவைத்தலைவர் ஜெகதீப் தங்கர் தெரிவித்தார். அப்போது எதிர்க்கட்சிகள் அமளியை தொடங்க, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தெரிக் ஓ பிரையனிடம், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெகதீப் தங்கர் எச்சரித்தார். எதிர்க்கட்சிகள் தங்களது இதயத்தில் மட்டும் ரத்தம் வடிவதாக நினைக்கின்றன என விமர்சித்த ஜெகதீப் தங்கர், வினேஷ் போகத்தை நினைத்து ஒட்டுமொத்த நாடுமே வேதனையில் இருப்பதாக கூறினார். இதில் அரசியல் ஆதாயம் அடைய நினைப்பது பெண்ணுக்கு செய்யும் அவமதிப்பு என்றும் கடிந்துகொண்டார். விவாதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதும் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. மாநிலங்களவை முனைவர் ஜே.பி. நட்டாவும் எதிர்க்கட்சிகளை விமர்சித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்