போதைப்பொருள் விவகாரம் குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். பரமக்குடியில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்பதற்காக, மதுரை விமான நிலையம் வந்தடைந்த எடப்பாடி பழனிசாமியை, அ.தி.மு.க.வினர் உற்சாகத்துடன் வரவேற்றனர். அப்போது, ஜாஃபர் சாதிக் விவகாரம் உள்ளிட்ட தமிழகத்தில் நடைபெற்ற போதைப்பொருள் விவகாரம் குறித்த துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.