பாஜக கூட்டணியில் இணையும் புதிய கட்சி? | PM Modi | BJP | Maharastra Nava Nirman Sena | NDA

Update: 2024-03-19 14:37 GMT

மகாராஷ்டிராவில் புதிய திருப்பமாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ராஜ்தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சியும் விரைவில் இணைய கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. தலைநகர் டெல்லியில் முகாமிட்டுள்ள ராஜ்தாக்கரே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக மூத்த முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார். ஓரிரு நாளில் பாஜக மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா ஆகிய கட்சியில் இடையேயான கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதி பங்கீடு இறுதியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்