NDA கூட்டணியை வழி நடத்தும் பாரதிய ஜனதா கட்சி, 446
தொகுதிகளில் போட்டியிடுகிறது.
உத்தர பிரதேசத்தில் 75 இடங்களிலும், மேற்கு வங்கத்தில்
42 இடங்களிலும், மகாராஷ்டிராவில் 30 இடங்களிலும்,
மத்திய பிரதேசத்தில் 29 இடங்களிலும் பாஜக
போட்டியிடுகிறது.
குஜராத்தில் 26 இடங்களிலும், ராஜஸ்தானில் 25 இடங்களிலும், கர்நாடகாவில் 25 இடங்களிலும், தமிழகத்தில் 23 இடங்களிலும் போட்டியிடுகிறது.
ஒடிசாவில் 21 இடங்களிலும், பீகார் மற்றும் தெலுங்கானாவில்
தலா 17 இடங்களிலும், கேரளாவில் 16 இடங்களிலும்
போட்டியிடுகிறது.
ஜார்காண்ட் மற்றும் பஞ்சாபில் தலா 13 இடங்களிலும், அசாம்
மற்றும் சத்திஸ்கரில் தலா 11 இடங்களிலும் போட்டியிடுகிறது.
ஹரியானாவில் 10 இடங்களிலும், டெல்லியில் 7 இடங்களிலும், ஆந்திராவில் 6 இடங்களிலும், காஷ்மீரில் 5 இடங்களிலும் போட்டியிடுகிறது.
உத்தரகாண்டில் 5 இடங்களிலும், ஹிமாச்சல பிரதேசத்தில்
4 இடங்களிலும், அருணாச்சல பிரதேசம், கோவா மற்றும்
திரிபுராவில் தலா 2 இடங்களிலும் போட்டியிடுகிறது.