நாட்டில் மதவெறியை விதைத்து, பிளவுபடுத்தி வேடிக்கை பார்த்தவர் பிரதமர் மோடி என்றும், எந்த முகத்துடன் தமிழ்நாட்டுக்கு வந்து வாக்கு கேட்கிறார் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை ரிங் ரோடு பகுதியில், இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த 10 ஆண்டு காலமாக தமிழ்நாட்டுக்கு எந்த நலத்திட்டங்களையும் செய்யாத பிரதமர் மோடி, எந்த முகத்துடன் தமிழ்நாட்டுக்கு வந்து வாக்கு கேட்கிறார் என்று கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டை மட்டும் பிரதமர் வஞ்சிக்கவில்லை என்று கூறிய முதலமைச்சர், எதிர்கட்சி ஆளும் மாநிலங்களையும் வஞ்சித்திருப்பதாக கடுமையாக சாடினார்....