நாடாளுமன்ற தேர்தலை விட நாடே நோக்கும் பதற்றமான தேர்தல்.. ஒரு ஸ்டெப் முன்னால் நிற்கும் இந்தியா கூட்டணி

Update: 2024-08-23 04:40 GMT

கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, 90 தொகுதிகளுக்கும் கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாக தெரிவித்தார். சிபிஎம் கட்சியும் தங்களோடு இருப்பதாக குறிப்பிட்டவர், ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், இந்தியா கூட்டணியோடு இருக்கிறோம் என்றார். மாநிலத்தில் மற்றொரு முக்கிய கட்சியான மக்கள் ஜனநாயக கட்சியோடு தேர்தலுக்கு பின்பு கூட்டணி அமையுமா? என்ற கேள்விக்கு, முதலில் தேர்தல் முடியட்டும், அதுகுறித்து பார்ப்போம் என்றதோடு, யாருக்கும் கூட்டணிக்கான கதவு மூடப்படவில்லை எனவும் பரூக் அப்துல்லா தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்