வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கோவையில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் கோவை மண்டல நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம், கோயம்புத்தூரில் வரும் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் நிர்வாகக் குழு, செயற்குழு, உறுப்பினர்கள் மற்றும் கோவை மண்டல நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் அறிவித்துள்ளார். கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அதிகம் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், கோவையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.