``விஷ சாராயம் : இறந்தவர்கள் என்ன தியாகிகளா, எதுக்கு ரூ10. லட்சம் ..?'' பிரேமலதா ஆவேசம்
விஷச்சாராயம் விவகாரம் குறித்து பேசுவதற்காக ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் நேரம் கொடுத்தவுடன் அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விஷச்சாராய உயிரிழப்பை கண்டித்து கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் விஷச்சாராய விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.