ஆவின் நிறுவனத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு கட்டங்களாக அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். நாகர்கோவில் அருகே அரசு பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஆவின் நிறுவனத்தை மேம்படுத்தும் வகையில், 10 ஆயிரம் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் பயிற்சி அளிக்க இருப்பதாக கூறினார். தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பால் உற்பத்தியாளர்களுக்கு பாலின் விலையை உயர்த்தி வழங்கி இருப்பதாகவும் அவர் கூறினார்.