லெபனானில் ஐ.நா. அமைதிப்படை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
லெபனானில் ஐ.நா. நகோரா தலைமையகம் மற்றும் அருகிலுள்ள நிலைகள் பலமுறை இஸ்ரேலிய படைகளால் தாக்கப்பட்டதாக ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு பல தரப்பில் கண்டனம் எழுந்துள்ள நிலையில், இந்தியா கவலையை வெளிப்படுத்தியுள்ளது. ஐ.நா.வின் அமைதி காக்கும் படையில் 600 இந்தியர்கள் உள்ளதும், இஸ்ரேல் - லெபனான் எல்லையில் 120-கிமீ நீலக்கோட்டில் நிறுத்தப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.