மதுரையில் வணிகர்களுக்கான சமாதானத் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில், மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் விருதுநகர் கோட்டங்களைச் சேர்ந்த வணிகர்கள் கலந்து கொண்டனர். 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலதிபர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில், கடந்த 1992 முதல் 2012-ஆம் ஆண்டு வரை, 50 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக நிலுவையில் உள்ள நிறுவனங்களின் வரி நிலுவை தள்ளுபடி ஆணையை அமைச்சர் மூர்த்தி வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் கடன் 7 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது என்றும், அதை விட 3 மடங்கு அதிகமாக வணிகர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
சமாதானத் திட்டத்தின் கீழ் வணிகர்களுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட உள்ளது என்றும், 95,000 வணிகர்கள் வரிச்சலுகை பெறுவார்கள் என்றும் அவர் கூறினார்.