ஷவர்மா சாப்பிட்ட சிறுமி மரணம் - "மொத்த உரிமையும் இழந்துவிட்டீர்கள்"- ஈ.பி.எஸ். ஆவேசம்

Update: 2023-09-19 04:16 GMT

ஷவர்மா சாப்பிட்ட சிறுமி மரணம் - "மொத்த உரிமையும் இழந்துவிட்டீர்கள், இனியும்.." - ஈ.பி.எஸ். ஆவேசம்

நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்டு 13 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக தமிழகத்தில் நடந்து வரும் இதுபோன்ற மரணங்களை பார்க்கும் போது, உணவு பாதுகாப்பை உறுதி செய்வதிலும், டெங்கு போன்ற நோய்களை கட்டுப்படுத்துவதிலும் அரசு தோல்வியுற்றுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். குறிப்பாக இனியும் ஆட்சியில் தொடர்வதற்கு, அரசு தனது தார்மீக உரிமையை இழந்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு அவர் தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்