ஃபார்முலா ரேஸ் டிராக்கில் மின்னல் வேகத்தில் பறந்த அமைச்சர் உதயநிதி கார்
ஃபார்முலா-4 கார் பந்தயத்தை நேரில் பார்க்க வந்த ரசிகர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியை சேர்ந்த 100 மாணவர்களுடன் இணைந்து போட்டியை கண்டு ரசித்த அவர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மாணவர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். இறுதிப்போட்டி துவங்குவதற்கு முன்பாக பந்தய சாலையில் காரில் அதிவேகமாக பயணித்தார்.