அதிமுக தொடக்க விழாவையொட்டி எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக களைகள் எடுத்த தோட்டமாய் செழித்து நிற்கிறது என பெருமிதம் தெரிவித்துள்ளார். வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை, ஆனால், நண்பர்கள் போல் இருந்து உட்பகை கொண்டவர்களின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும் என்று வள்ளூவர் அறிவுரை வழங்கியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். உட்பகை கொண்டவர்கள் இனி நம் இயக்கத்திற்கு வேண்டாம் என்பதில் உறுதியோடு நிற்போம் என தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, 2026-ல் அதிமுக ஆட்சி அமைய எந்த ஒரு தியாகத்தையும் செய்ய தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். உட்பகை கொண்டவர்கள் என்று யாரை எடப்பாடி சொல்கிறார் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தை பரபரக்க செய்திருக்கிறது