தலைகீழான முடிவுகள்...கணிப்புகளை தவிடுபொடியாக்கிய கள நிலவரம்-தந்தி டிவி சர்வேயில் எதிர்பாரா சர்ப்ரைஸ்

Update: 2024-06-02 11:10 GMT

தலைகீழான முடிவுகள்...கணிப்புகளை தவிடுபொடியாக்கிய கள நிலவரம் - தந்தி டிவி சர்வேயில் எதிர்பாரா சர்ப்ரைஸ்

தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் உள்ள 8 நாடாளுமன்றத் தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு என்பதை தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளில் விரிவாகக் காணலாம்...

தந்தி டிவி நடத்திய பிரம்மாண்ட கருத்துகணிப்பு முடிவுகளின் படி, வடக்கு மண்டலத்தில் அமைந்துள்ள அரக்கோணம் தொகுதியில் திமுகவின் ஜெகத்ரட்சகன் 40 சதவீத வாக்குகளையும், அதிமுகவின் ஏ.எல்.விஜயன் 30 சதவீத வாக்குகளையும், பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு 21 சதவீத வாக்குகளையும் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அரக்கோணத்தை ஜெகத்ரட்சகன் தக்கவைப்பார் என தெரியவந்துள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 35 சதவீத வாக்குகளையும், பாஜக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 33 சதவீத வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் பசுபதி 22 சதவீத வாக்குகளையும் பெறலாம் என கருத்துக்கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது. வேலூரில் வெற்றிக்கனியை எட்டிப்பறிக்க திமுக - பாஜக இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

திருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரை 44 சதவீத வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 30 சதவீத வாக்குகளையும், பாஜகவின் அஸ்வத்தாமன் 14 சதவீத வாக்குகளையும் பெறலாம் என கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. சுலபமாக திருவண்ணாமலையில் திமுக வெற்றிக்கொடி நாட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரணி தொகுதியில் திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 41 சதவீத வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் ஜி.வி.கஜேந்திரன் 33 சதவீத வாக்குகளையும், பாமக வேட்பாளர் கணேஷ் குமார் 18 சதவீத வாக்குகளையும் பெறலாம் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆரணி தொகுதியும் திமுக பக்கம் செல்லும் என தெரிகிறது.

விழுப்புரம் தொகுதியில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் 41 சதவீத வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் 35 சதவீத வாக்குகளையும், பாமக வேட்பாளர் முரளி சங்கர் 16 சதவீத வாக்குகளையும் பெற வாய்ப்பிருப்பதாக கருத்துக்கணிப்பு காட்டுகிறது. விழுப்புரம் விசிக வசமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் மலையரசன் 39 சதவீத வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் குமரகுரு 36 சதவீத வாக்குகளையும், பாமக வேட்பாளர் தேவதாஸ் உடையார் 16 சதவீத வாக்குகளையும் பெறுவார்கள் என கருத்துக்கணிப்பில் தெரிகிறது. கள்ளக்குறிச்சியை கைப்பற்றுவதில் திமுக - அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் 40 சதவீத வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் 36 சதவீத வாக்குகளையும், பாஜக வேட்பாளர் நரசிம்மன் 11 சதவீத வாக்குகளையும் பெறுவார்கள் என்றும் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் வெற்றிவாகை சூடுவார் என்றும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

தருமபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.மணி 34 சதவீத வாக்குகளையும், பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி 32 சதவீத வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் அசோகன் 26 சதவீத வாக்குகளையும் பெற வாய்ப்பிருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவு தெரிவிக்கிறது. தர்மபுரியை வசப்படுத்துவதில் திமுக, பாமக இடையே இழுபறி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்