"15 நாட்களில் காங். பெயரை 232 முறை, தனது பெயரை 758 முறை மோடி பேசியுள்ளார்" - கணக்கு வைத்த கார்கே

Update: 2024-05-30 16:41 GMT

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டின் முக்கிய பிரச்சினைகளில் கவனம் சென்று விடாமல், மக்களை திசை திருப்ப பாஜகவும் பிரதமர் மோடியும் எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டதாக தெரிவித்தார். ஜாதி, மதத்தின் அடிப்படையில் வாக்கு சேகரிக்க கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தும், 421 முறை கோயில்-மசூதி மற்றும் பிரித்தாளும் விவகாரங்களை பிரதமர் மோடி பேசியிருப்பதாக கார்கே குற்றம் சாட்டினார். கடந்த 15 நாட்களில் காங்கிரஸ் பெயரை 232 முறையும், தனது பெயரை 758 முறையும் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியதாகவும், ஆனால், நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் குறித்து ஒரு முறை கூட பேசவில்லை என்றார். அதனால், மக்களின் பார்வை தங்கள் பக்கம் திரும்பியுள்ளதாகவும், ஜூன் 4ஆம் தேதி தெளிவான தீர்ப்பை அளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்