மக்களவைத் தேர்தல் தோல்விக்கு கூட்டணி பலம் இல்லாததே காரணம் என நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் முறையிட்டதாக தகவல். 2026 தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஈபிஎஸ் தெரிவித்ததாக தகவல். 2026 தேர்தலில் பாஜக இல்லாத வலுவான கூட்டணி அமைக்கப்படும் என கூறியதாக தகவல். கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், கூட்டணி பலமாக அமையாதது தோல்விக்கான காரணம் என கூறியதாக தகவல். மகளிர் உரிமை தொகை, விடியல் பயணத் திட்டம் போன்ற திட்டங்களும் அதிமுகவின் தோல்விக்கு காரணம் என கூறியதாக தகவல். கட்சியில் தற்போதைய நிலையே தொடரட்டும், புதிதாக யாரையும் கட்சியில் சேர்க்க வேண்டாம் என சில நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல். நிர்வாகிகள் பேசிய போது எடப்பாடி பழனிசாமி அமைதியாக கேட்டதாக கூறப்படுகிறது. எங்கெல்லாம் பிரச்சினை உள்ளதோ, அவைகளை சரி செய்ய மாவட்ட செயலாளர்களுக்கு, ஈபிஎஸ் அறிவுறுத்தியதாக தகவல். இளைஞர்களை அதிகளவில் சேர்த்து அவர்களுக்கு வாய்ப்பளிக்க ஈபிஎஸ் அறிவுறுத்தியதாக தகவல். இன்றைய கூட்டத்தில் பிரிந்து சென்ற தலைவர்களை இணைப்பது குறித்து பேசப்படவில்லை என தகவல்...