அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக, திமுக எம்பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில், இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது,
எடப்பாடி பழனிச்சாமி, மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன், தன் தொகுதி மேம்பாட்டு நிதியை, 75 சதவீதம் பயன்படுத்தவில்லை என குற்றம்சாட்டியிருந்தார். தனது பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதால், எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என, தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கேட்காததால், அவருக்கு எதிராக எழும்பூர் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆஜராக உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.