தேனியில் அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.டி.நாராயணசாமியை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அது பாஜக அரசாக இருந்தாலும் அதை எதிர்த்து முறியடிக்கும் சக்தி படைத்த கட்சி அதிமுகதான் என்று கூறினார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து உண்மைக்கு புறம்பான செய்திகளைச் சொல்லி, அவற்றை உண்மையாக்க முதல்வர் ஸ்டாலின் முயற்சிக்கிறார் என்றும் அவர் கூறினார்.