தூத்துக்குடியை டிக் செய்த கனிமொழி... திமுகவில் களமிறங்க போகும் முக்கிய தலைகள்

Update: 2024-02-23 17:38 GMT

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் விருப்பமனு வாங்கியுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களை தேர்வு செய்யும் விதமாக கடந்த 19ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு விநியோகம் தொடங்கியது. தற்போது வரை 400-க்கும் மேற்பட்டோர் விருப்பமனு வாங்கியுள்ள நிலையில், துணை பொதுச்செயலாளர் கனிமொழி மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 30-க்கும் மேற்பட்டோர் விருப்பமனு வாங்கி உள்ளனர். இதே போல் தயாநிதி மாறன் மீண்டும் போட்டியிடவும் விருப்பமனு வாங்கப்பட்டுள்ளது. மேலும் டி.கே.எஸ். இளங்கோவன், கவிஞர் காசி முத்துமாணிக்கம், அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு, அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன் வேலு பெயரிலும் விருப்ப மனு வாங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் ஒன்றாம் தேதி முதல் 7ஆம் தேதிக்குள் விருப்பமனுவை பூர்த்தி செய்து வழங்க திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்