நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு மக்கள் விடுதலைக் கட்சி ஆதரவு அளித்துள்ளது. மதுரையில் மக்கள் விடுதலை கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் நிறுவன தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ வுமான முருகவேல் ராஜன் தலைமையில் நடைபெற்றது, கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.கவை புறக்கணிக்கும் வகையிலும், தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்கும் விதமாகவும், இந்தியா கூட்டணியை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டியும், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தார்.