தமிழகத்தில் கால் வைக்கும் முன் முதல்வர் விடுத்த அழைப்பு... செப்.17 அதிரப்போகும் தலைநகர் சென்னை

Update: 2024-09-13 09:05 GMT

தமிழகத்தில் கால் வைக்கும் முன் முதல்வர் விடுத்த அழைப்பு... செப்.17 அதிரப்போகும் தலைநகர் சென்னை

தி.மு.க. பவள விழாவில் படையெனத் திரண்டு, கொண்டாடி மகிழ்வோம் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அமெரிக்காவில் இருந்து தமிழகம் புறப்படும் முன், தி.மு.க.வினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய மடலில், செப்டம்பர் 17ம் தேதி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் தி.மு.க. பவள விழா நிறைவுப் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த 75 ஆண்டுகாலத்தில், தெற்குதான் வடக்கிற்கு வழிகாட்டுகிறது என்கிற அளவிற்கு தி.மு.க.வின் கொள்கைத் தாக்கம் நாடு முழுவதும் பேசப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். திராவிட மாடல் என்பது இந்திய மாநிலங்கள் பின்பற்றும் கோட்பாடாக மாறியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

அனைத்துத் துறைகளிலும் முன்னேறிய மாநிலமாகத் தமிழ்நாடு அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழர்களின் நலன் காக்கும் வாரியம் என உலகத்தில் தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களின் நம்பிக்கைக்குரிய இயக்கமாக - அவர்களின் நண்பனாகத் தோழனாகத் திகழ்கிற இயக்கம்தான் தி.மு.க. என தெரிவித்துள்ளார்.

75 ஆண்டுகால வெற்றிப் பயணம் தொடர்ந்திட, செப்டம்பர் 17 அன்று, தி.மு.க பவள விழாவில் படையெனத் திரண்டு, கொண்டாடி மகிழ்வோம்... இது உங்களில் ஒருவனான தன்னுடைய அழைப்பு மட்டுமல்ல; இந்த இயக்கத்தை உருவாக்கிய பேரறிஞர் அண்ணாவும், பேணிப் பாதுகாத்து வளர்த்த கலைஞரும் நம்மை அழைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்