கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில், மத்திய அரசைக் கண்டித்து டெல்லியில் இன்று போராட்டம் நடைபெற உள்ளது. கன்னட மக்களிடம் வரியை வாங்கும் மத்திய அரசு, கர்நாடகாவுக்கு போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை என்று முதலமைச்சர் சித்தராமையா குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில், மத்திய அரசைக் கண்டித்து, போதிய நிதியை ஒதுக்கக்கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில், சித்தராமையா ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளார். இதற்காக, முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் டெல்லி சென்றுள்ளார். நாளை, தமிழ்நாடு மற்றும் கேரளா சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது. இதற்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் டெல்லி சென்றுள்ளார்.