வரும்.8ல் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்
பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வரும் 8ஆம் தேதி விவாதம் நடைபெற உள்ளது.
மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரும் 8ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் 8ஆம் தேதியில் இருந்து 10ஆம் தேதி வரை நம்பிக்கையிகாங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு
ல்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் என்றும் வரும் 10ஆம் தேதி தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பிரதமர் மோடி பதிலளிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது. இதனிடையே நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை உடனே தொடங்க வலியுறுத்தி அலுவல் ஆய்வு குழு கூட்டத்திலிருந்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளி நடப்பு செய்தன.