தேர்தல் ஆதாயங்களுக்காக நீதியை கொலை செய்வது ஜனநாயக அமைப்பிற்கு ஆபத்து என ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுவித்த குஜராத் அரசின் உத்தரவை உச்சநீதிமன்றம் இன்று ரத்து செய்தது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராகுல், பில்கிஸ் பானுவின் அயராத போராட்டம் நீதிக்கான வெற்றியின் அடையாளம் என குறிப்பிட்டுள்ளார். மேலும், தேர்தல் ஆதாயங்களுக்காக நீதியை கொலை செய்யும் மனப்பாங்கு ஜனநாயக அமைப்பிற்கு ஆபத்து எனவும் தெரிவித்துள்ளார்.