காரைக்காலில், விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பத்து பகுதியில், விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்யவும், புதிதாக கடன் வழங்க வலியுறுத்தியும் நேரு நகரில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக சென்றனர். அப்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை திடீரென நாராயணசாமி தலைமையில் காங்கிரசார் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.