ராமநாதபுரத்தில் பணியின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த காவல்துறை உதவி ஆய்வாளருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பரமக்குடி நகர் பகுதியில் சமுதாய கொடிக்கம்பங்களை அகற்ற முயன்றபோது, காவல்துறை எஸ்.ஐ. மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது உடலானது 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் உயிரிழந்த சரவணனின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், சரவணனின் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கவும், அவர் உத்தரவிட்டார்.