மக்கள் தங்கள் சேமிப்புகளை, அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து வாழ்வில் வளம் சேர்ப்பதுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துணை புரிந்திட வேண்டுமென, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். உலக சிக்கன நாள் கொண்டாடப்படுவதையொட்டி முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சேமிப்பின் அவசியத்தை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே எடுத்துரைத்து, சேமிக்கும் நற்பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.