"சிஏஏ வருவதற்கு காரணமே ஈபிஎஸ் தான்" - மணப்பாறை MLA பரபரப்பு குற்றச்சாட்டு

Update: 2024-03-23 06:37 GMT

சென்னையை அடுத்த தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட கட்சியின் பொதுச் செயலாளரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரும் அப்துல் சமது பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மத்திய பாஜக அரசின் அனைத்து தடைகளையும் மீறி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை மக்கள் வெற்றி பெறச்செய்வார்கள் என்று கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டம் வருவதற்கு காரணமாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி என்றும், நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் எதிராக வாக்களித்திருந்தால் இந்த சட்டமே வந்திருக்காது என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்