முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2023-09-19 04:25 GMT

வருமானத்திற்கு அதிகமாக 73 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில், முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியின் நேர்முக உதவியாளர் விடுவிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேர்முக உதவியாளர் வெங்கடகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவியை 2012ஆம் ஆண்டு விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்த‌து. இதை எதிர்த்து அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வருமானத்துக்கு அதிகமாக 700 சதவீதம் சொத்து சேர்த்துள்ளது நிரூபணமாகியுள்ளதால், விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. தண்டனை குறித்து விளக்கமளிக்க இன்று இருவரும் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்