பாஜக கூட்டணியில் தேமுதிக-பாமக..? - களமிறங்கிய டெல்லி ஸ்குவாடு - அதிமுகவுக்கு ஷாக்...
தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்காக மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி மற்றும் வி.கே.சிங் தமிழகம் வந்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள சூழலில், தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான திமுக தொகுதிப் பங்கீட்டை முடித்துள்ளது. எதிர்கட்சியான அதிமுக, தொடர்ந்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டின் முக்கிய கட்சியான பாமக மற்றும் தேதிமுகவை கூட்டணியில் சேர்க்க அதிமுக மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக இரு கட்சிகளுடனும் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தேமுதிக உடன் அதிமுக அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தையை மேற்கொண்டது. பாமக உடனும் அதிமுக பேச்சுவார்த்தை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்த மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி மற்றும் வி.கே.சிங் ஆகியோர் தமிழகம் வந்துள்ளனர். அவர்கள், பாமக மற்றும் தேமுதிகவுடன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.