முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தினமும் கொலை, கொள்ளை என சட்டம்- ஒழுங்கு சீர்கேட்டால் தத்தளிக்கும் தமிழகத்தை சீரான பாதையில் கொண்டு செல்ல எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், திமுகவினரை விமர்சிப்பவர்களை மட்டும் கைது செய்வது சர்வாதிகாரத்தின் உச்சம் என்று குறிப்பிட்டுள்ளார். பட்டியல் சமுதாயத்தினரை தவறாகப் பேசினார் என சாட்டை துரைமுருகன் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார். சாட்டை துரைமுருகன் பேசிய அதே வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக, மறைந்த தந்தை கருணாநிதி சார்பில், முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்பாரா? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.