அரசுக்கு,100 ஏக்கர் பரப்பளவில் அமைந்த அரண்மனையை தானமாக வழங்கிய புதுக்கோட்டை மன்னருக்கு, மணி மண்டபம் அமைக்க 2 ஏக்கர் நிலம் வழங்க தமிழக அரசு மறுப்பதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அவர், மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு கட்டப்படும் மணிமண்டபத்திற்கு 2 ஏக்கர் நிலம் வழங்க அரசு மறுப்பதாக குறிப்பிட்டார். உடனடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு நிலம் வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.