காட்டுத்தீயாய் பரவிய அண்ணாமலை வீடியோ.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை
ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பணம் கொடுப்பது போன்ற வீடியோ கடந்த ஆண்டு ஜூலை மாதம் எடுக்கப்பட்டது என்பது காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரி கிராந்தி குமார் பாடி கூறியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, காவல் துறை விசாரணைக்கு அவர் உத்தரவிட்டிருந்தார். விசாரணையில், அந்த வீடியோ அண்ணாமலை கடந்த 2023 ஜூலை மாதம், என் மண் என் மக்கள் யாத்திரையின்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. எனவே, இது தேர்தல் விதிமுறை வரம்புக்குள் வராது என்று கிராந்தி குமார் பாடி கூறியுள்ளார்.