தீர்ப்பால் வந்த கோபம்.. இறங்கி செய்த ஓபிஎஸ் தரப்பு.. அதிர்ச்சியில் அதிமுகவினர்

Update: 2023-11-10 07:23 GMT

அதிமுகவின் சின்னம், கொடி மற்றும் அதிமுக கொடியின் அடையாள வண்ணங்களையோ ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. இதை ஏற்று, நெல்லை மாவட்டம் இட்ட மொழியில் ஓபிஎஸ் அணியின் மாநில செய்தி தொடர்பாளர் டென்சிங் ஸ்வாமிதாஸ் தலைமையில், திரண்ட தொண்டர்கள், இட்டமொழி சந்திப்பில் இருந்த அதிமுக கொடி கம்பத்தை அகற்றினர். பின்னர், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படம் இருந்த அதிமுக கொடியின் வண்ணத்தையும், இரட்டை இலை சின்னத்தையும் வெள்ளை நிற பெயிண்டால் அழித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் ஓபிஎஸ் வாழ்க என கோஷமிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்