கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற எம்.பி. தேர்தலில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது, துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், கணக்கில் வராத 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு உள்பட பல்வேறு இடங்களில் இருந்து 11.55 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சட்டவிரோத பணப்பறிமாற்றம் நடந்ததா என அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நவம்பர் 28ம் தேதி நேரில் ஆஜராகுமாறு, தற்போது திமுக எம்.பி.யாக உள்ள கதிர் ஆனந்த்திற்கு அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் சம்மனின் படி, கதிர் ஆனந்த் எம்.பி. நேற்று ஆஜராகவில்லை. இதனையடுத்து, அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப அமலாக்கத்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.