காஷ்மீர் செல்கிறார் பிரதமர் மோடி

ஜம்மு - காஷ்மீருக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

Update: 2022-04-24 03:10 GMT
காஷ்மீர் செல்கிறார் பிரதமர் மோடி

ஜம்மு - காஷ்மீருக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

தேசிய பஞ்சாயத்து ராஜ் தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீருக்கு செல்கிறார். சம்பா மாவட்டத்தில் உள்ள பாலி பஞ்சாயத்துக்கு செல்லும் அவர், அங்கிருந்து நாடு முழுவதும் உள்ள கிராம சபை கூட்டங்களில் உரையாற்ற உள்ளார். பின்னர், 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். அம்ரித் சரோவர் திட்டம், வாணி கால் குவாசி கண்ட் சாலையில் கட்டப்பட்டுள்ள சுரங்க பாதை, 500 கிலோ வாட் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின்சக்தி திட்டத்தை அவர் துவக்கி வைக்கிறார். டெல்லி - அமிர்தசரஸ் - கத்ரா விரைவுசாலைத் திட்டம், ராட்லே மற்றும் க்வார் புனல் மின் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
Tags:    

மேலும் செய்திகள்