தந்தையிடம் இருந்து முரண்படும் யுவன்?

இசைஞானி இளையராஜாவின், இளைய ராஜாவாக திரையுலகிற்குள் காலடி எடுத்து வைத்தவர், யுவன் சங்கர் ராஜா....

Update: 2022-04-19 14:29 GMT
இசைஞானி இளையராஜாவின், இளைய ராஜாவாக திரையுலகிற்குள் காலடி எடுத்து வைத்தவர், யுவன் சங்கர் ராஜா....

பின்னணி இசையிலும் சரி, பாடல்களிலும் சரி... தந்தை இசைஞானியின் சாயல் கொஞ்சம் கூட தெரியாமல் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளம் கொண்டவர்..

ரீமேக் பாடல்களுக்கு பிள்ளையார் சூழி போட்டதாகட்டும்.... தீம் மியூசிங்கில் அசத்துவதாகட்டும்..... யுவன் வழி என்றும் தனி வழி தான்... 'கிங் ஆப் பிஜிஎம்' என இளைஞர்களை அவரை கொண்டாடி மகிழ்கின்றனர். 

அப்படியிருக்கையில் தனது ஒற்றை சமூகவலைதள போஸ்ட்டால் ஒட்டுமொத்த தேசத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார், யுவன்...

தந்தை இளையராஜா பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பீடு செய்தது, அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தனது போட்டோவோடு சேர்த்து 'கருப்பு திராவிடன், பெருமைக்குரிய தமிழன்' என யுவன் பதிவிட்டிருப்பது... தந்தையிடம் இருந்து முரண்படுகிறாரா? யுவன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது... 


இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வரிசையில்,  தமிழ் மண் மீதான தனது பற்றை அவ்வபோது வெளிப்படுத்தி வருபவர் யுவன்... 

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தனது 
ஆதரவை பாடல் மூலம் வெளிப்படுத்தியது... 'இந்தி தெரியாது போடா' என்ற டி சர்ட்டை உலகளவில் டிரெண்டாக்கியது.... என இதற்கு முன்பும் சமூக வலைத்தளங்களை அலற வைத்திருந்தார்... யுவன். 

இளையராஜாவிற்கு பாஜகவினர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், யுவன் கருப்பு என்றால் நான் அண்டங்காக்கா கருப்பு,, நானும் திராவிடன் தான் என கூறி... இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. 

Tags:    

மேலும் செய்திகள்